தாய்வானிலிருந்து 200க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர்

தாய்வானிலிருந்து 200க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர்

தாய்வானிலிருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 268 சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தாய்வானின் தேசிய குடிவரவு முகமை தெரிவித்திருக்கின்றது. இவர்கள அனைவரும் மே 1 முதல் 31 வரையிலான காலத்தில் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். 

 தற்போது வெளியேற்றப்பட்ட குடியேறிகள் இந்தோனேசியா, வியாட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

சமீபத்தில், அறிவிக்கப்பட்ட மன்னிப்பு திட்டத்தின் கீழ் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். 

இது தொடர்பாக குடிவரவு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  குடியேறிகள் ஈகை பெருநாளுக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் முதல் நாடுகடத்தல் பணியை தீவிரப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் மன்னிப்பு திட்டத்தின் கீழ் வெளியேறுகிறவர்கள், அதிகபட்சமாக 63 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4000 ரூபாய்) அபராதம் கட்டினால் போதுமானது. தைவானில் மீண்டும் நுழைவதற்கு விதிக்கப்படும் தடைக்கான காலயளவும் குறைக்கப்படும். தைவானில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னிப்பு காலம் நிறைவடைந்த பின்னர் வெளியேற்றப்படுகிறவர்களுக்கு 20,000 ரூபாய் வரை அபராதமும் மீண்டும்  தாய்வானுக்குள் நுழைவதற்கு நீண்டகால தடையும் விதிக்கப்படும் என குடிவரவு முகமை எச்சரித்திருக்கின்றது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்