பதவி விலகினாலும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் முஸ்லிம் தலைமைகள்?

அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ள போதிலும், அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சின் உத்தியோகப்பூர்வ வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படாமல் முன்னாள் அமைச்சர்களின் பயன்பாட்டிலேயே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அமைச்சு பதவிக்குரிய உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழாமும் திரும்ப வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவிவிலகுவதாக அறிவித்திருந்தபோதும், அவர்களின் பதவி விலகல் கடிதங்கள் இதுவரை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைக்கவில்லையென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்