ரவி கருணாநாயக்கவின் மகளிடம் CID வாக்குமூலம்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநாயக்க தற்பொழுது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில், உண்மைக்குப் புறம்பான சாட்சியம் வழங்கியமை குறித்தே அவரிடம் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் பெறப்படுகிறது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரின் மகள் ஒனேலா கருணாநாயக்க ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்குமாறு கடந்த மாதம் 30ஆம் திகதி அரசாங்கத்தின் சட்டத்தரணி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும், அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இதுவரை முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்