ஜனாதிபதி கூறியதற்கமைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – பூஜித் சாட்சியம்

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இடமாற்றம் தொடர்பான விவகாரம் ஒன்றுக்காக ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதன் பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை என, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன தனக்கு வாய்மூல அறிவித்தலை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தன்னிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அங்கு சாட்சியமளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்