இளந்தளிர் விளையாட்டு மைதான மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.

முல்லைத்தீவு – பூதன்வயல், முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள, இளந்தளிர் விளையாட்டுக்கழக மைதான மறுசீரமைப்பு வேலைகளை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகன் அவர்கள், 03.06.2019 நேற்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பரிந்துரையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் விசேட ஒதுக்கீட்டினூடாக பூதன்வயல் கிராம இளந்தளிர் விளையாட்டுக்கழகத்திற்கு உரூபாய் 500,000.00 (ஐந்து இலட்சம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த விளையாட்டுக்கழக மைதானத்தினுடைய மறுசீரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு இடம்பெற்றுவரும் மறுசீரமைப்பு வேலைகளையே ரவிகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்