முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரையும் கைதுசெய்! – போர்க்கொடியை உயரத் தூக்கினார் ஞானசாரர்

“குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அரசு கைதுசெய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் பின்னர் நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு நேரடித் தொடர்புண்டு. எனவே, முஸ்லிம் அமைச்சர்களும், ஆளுநர்களும் பதவிகளைத் துறந்துவிட்டார்கள்தானே என்று கூறிவிட்டு அவர்களைச் சும்மாவிட முடியாது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் நபர்கள் என்று அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் இன்று நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளனர். சிலரின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நம்ப முடியாமல் உள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்