தனுஷின் அசுரன் பட கதாநாயகி இவர்தானா? அப்போ ஸ்னேகா

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதில் அசுரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ், கொடி படத்தை தொடர்ந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா- மகன் என்ற இரண்டு வித கதாபாத்திரங்களில் அப்பாவாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார்.

ஆனால் மகனாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்