402 ஐபோன்களுடன் கைது செய்யப்பட்ட மூவர் CID இடம் ஒப்படைப்பு!

நீா்கொழும்பு – ஏத்துகால பகுதியில் 402 ஐபோன்கள் உள்ளிட்ட பல தொலைத்தொடா்பு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபா்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செயற்பாட்டில் இருந்த 402 ஐபோன்கள், 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள், 60 ரவூட்டா்கள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நேற்று குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜையொருவரும் அடங்குவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

அவர்கள், தொடர்பாடல் செயன்முறையில் குறிப்பாக சர்வதேச அழைப்புகளை மேற்கொண்டபோது மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்