டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – குருநகர் பற்றிக் பகுதியில் கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வரும் குறித்த நபர், டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்