கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு இன்று (சனிக்கிழமை) முற்பகல் 9.00 மணிமுதல் 24 மணித்தியாலத்திற்கு ஹோகந்தரை பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு நகர அபிவிருத்தி திட்டப் பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவலை மாநாகர சபைகளின் அதிகாரப் பகுதிகள், பொரலஸ்கமுவை நகர சபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை, இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிறுப்பு முதலான பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்