வாகன விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு: மக்கள் ஆர்ப்பாட்டம் – ஏ-9 வீதிக்கு பூட்டு

பாடசாலை மாணவர்களின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கெக்கிராவை திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பலகை கொண்டுச்சென்ற லொரி ஒன்று மேலதிக வகுப்புக்குச் செல்ல வீதிக்கு ஓரமாக நின்ற பாடசாலை மாணவர்களை மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு மாணவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் பிரதேச மக்கள் இணைந்து இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்