அவசரகாலச் சட்டம் குறித்து சார்ள்ஸ் அதிருப்தி!

அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள முடியாத சில சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரக்காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள முடியாத சில சம்பவங்கள் வடக்கு கிழக்கில் அரங்கேருகின்றன.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் அரசாங்கமும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்