தமிழர்களுக்கான தீர்வு முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது – சுரேஸ்

இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறும் முன்னரே, தமிழர்களுக்கான தீர்வுத் திட்ட முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கி விட்டது என்றும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழர்களுக்கான தீர்வு முயற்சி தற்போது தடைப்படவில்லை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எனினும் அதன் மூலமும் எதுவும் செய்யப்படவில்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அரசாங்கம் மொத்தமாக தமிழர்களுக்கான தீர்வுத் திட்ட முயற்சியிலிருந்து பின்வாங்கி விட்டது.

அத்தோடு, அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டாலும், கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை” அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்