நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது!

 மைத்திரியின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி 

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க முடியாது.”

– இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேற்படி தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலை. அது நிறைவேற்று அதிகாரத்தின் வேலையல்ல. எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்