முஸ்லிம் எம்.பிக்கள் மஹிந்தவுடன் பேச்சு

தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர்.

கொழும்பு – 07, விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தாம் கூட்டாக அமைச்சுப் பதவிகளைத் துறந்தமைக்கான காரணம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்தவிடம் எடுத்துரைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்