காத்தான்குடி பள்ளிவாசல் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு!

காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஜமைத்துல் உலமாசபையின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 11ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அசாத் சாலியும் அதேநாளில் சாட்சியமளிக்க அழைக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்