ஈஸ்டர் தாக்குதல்கள் – விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை குறித்து தகவல்!

இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம்  கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளித்துள்ளன. இந்நிலையில் குறித்த குழுவின் 3ஆவது அறிக்கை அடுத்த வாரத்திற்குள் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் பலர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்