திடீரென உடைந்து விழுந்தது பேருந்தின் மிதிபலகை -பறிபோயின இரண்டு உயிர்கள்!

இலங்கை போக்குவரத்துச்சபையின் மிதிபலகை திடீரென உடைந்து விழுந்ததில் நடத்துநரும் பயணி ஒருவரும் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து கடுகண்ணாவை பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றள்ளது.

முன்பக்க மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்ற இருவரும் முன்சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துநரே உயிரிழந்தவராவார். பயணியின் தகவல்கள் வெளியாகவில்லை

உயிரிழந்த நடத்துநரின் சடலம் நாவலை வைத்தியசாலையிலும் மற்றயவரின் சடலம் மாவனல்லை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்