கணவனை கொலை செய்த மனைவி கைது!

(க.கிஷாந்தன்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் 09.06.2019 அதிகதலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

08.06.2019 அன்று இரவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கணவன் மதுபோதையில் இருந்த வேளையில் அதிகாலை 1 மணியளவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தலை பகுதியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், கொலை செய்த பின் குறித்த பெண் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யபட்ட நபர் 44 வயதுடைய ஆறுமுகன் ஜெயராமன் மூன்று பிள்ளைகளின் தந்தை என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே சம்பவம் தொடர்பில் மரண விசாரனைகளுக்காக அட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு விசாரனைகளை மேற்கொண்டதன் பின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யபட்ட மனைவி 09.06.2019 அன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபடவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்