மஹிந்தவுடன் மோடி விரிவான கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுடனான பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்புக்கு மத்தியில் சென்ற மோடி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்