விலைகொடுத்து தாக்குதலை நடத்தியவரை கண்டறிந்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: அமீர் அலி

விலைக்கொடுத்து தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் யாரென்பதை கண்டறிந்தால், நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அமீர் அலி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஏதோவொரு தேவைக்காகவே தொடர் குண்டுத் தாக்குதல் விலைக்கொடுத்து நடத்தப்பட்டுள்ளது. அதனிலும் கிறிஸ்தவ மக்களை ஏன் இலக்கு வைத்தார்கள் என்ற உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் .

அச்சுறுத்தல் குறித்து புலனாய்வு தகவல்களை பாதுகாப்பு சபையில் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவவில்லை.

இதேவேளை பயங்கரவாத சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்படுகின்ற சாட்சியங்களில் நிறைய மர்மங்கள் காணப்படுகின்றமையினால் வாக்குமூலங்களிலும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மேலும் தற்கொலை குண்டுத் தாக்குதல் விலைகொடுத்து செய்யப்பட்ட வேலைத்திட்டமாகவே கருதுகிறோம்.

ஆகவே தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள்  என்பதை கண்டறிந்தால் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை பெறமுடியும்” என அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்