சீரற்ற வானிலை காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக 3,61,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்றுடன் கூடிய மழையால், 123 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மண்சரிவு எச்சரிக்கைக் காரணமாக, 75 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் பாதுகாப்பான 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்