முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார் ஹக்கீம்!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சென்னையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற ரவூப் ஹக்கீம், ஸ்டாலினையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அமோக வெற்றியீட்டியமைக்கு தனது வாழ்த்தை இதன்போது ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் முஸ்லிம் மக்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஸ்டாலினிடம் ஹக்கீம் விளக்கியுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கடந்த வாரம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்