இலங்கை மண் இரத்தம் தோய்ந்த பூமியாக மாறியுள்ளது: ரஞ்சித் ஆண்டகை

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை மண் இரத்தம் தோய்ந்த பூமியாக மாறியுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அக்மீமன பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சித் ஆண்டகை இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றமையினால் தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நீண்டகாலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டதா என்பது குறித்து விசாரணைகளின் பின்னரே முடிவுக்கு வரமுடியும்.

இதேவேளை ஊழல் இல்லாத இடமே இலங்கையில் இல்லையென்றே கூற வேண்டும். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சட்டத்திட்டங்களை மீறி செயற்படுவதற்கு பழகியுள்ளனர்” என ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்