குண்டுத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து அரசு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்றபோதும், அதனை தடுப்பதற்கு எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த சம்பவத்தின் உண்மை தன்மையினை கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழு, குண்டுத் தாக்குல்கள் குறித்து பல்வேறு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்த நிலையில், இன்று இறுதியறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்