மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா, பொல்கொல்ல, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் மழை இன்மையினால் நீர்த்தேக்கங்களின் அளவு குறைந்துள்ளது.

குறிப்பாக மகாவலி நீர்த்தேக்க திட்டத்தால், நிர்வகிக்கப்படும் கொத்மலை நீர்த்தேக்கம் 75.9 மில்லியன் கன மீட்டர் திறன்கொண்டது. இந்த நீர்த்தேக்கம் தற்போது 53.7 மில்லியன் கன மீட்டர் அளவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விக்டோரியா நீர்த்தேக்கம் 17.6மீற்றர் ஆக குறைந்துள்ளது. அதேபோல் ரந்தம்பே நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவைவிடவும்  30.8 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒரு நாளைக்கு 225 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விக்டோரியா நீர்த்தேக்கம், தற்போது ஒரு நாளைக்கு சுமார் 25 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் மழைப்பொலிவு இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்