ஈஸ்டர் தாக்குதலைப் பற்றிய அறிக்கையை வெளியிடுங்கள் – எதிர்க்கட்சி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசேட விசாரணைக் குழுவினால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையை எதிர்க்கட்சி கோரியுள்ளது.

குறித்த அறிக்கையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதனால் இதனை வெளியிடுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா கோரியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பான முழு தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே குறித்த குழுவின் பரிந்துரையை வெளியிட்டு நாட்டில் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்