வவுனியா மின்சார சபையால் மின்குமிழ் வினியோகித்தல் செயற்திட்டம் முன்னெடுப்பு!!

வவுனியா பிரதேச மின்சார சபையால் எல்.ஈ.டி மின்குமிழ் வினியோகிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பிரதம மின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

மின் சக்தி கேள்வி முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில், இலங்கை மின்சார சபை, வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார நிறுவனம், இலங்கை மின்மாற்றிகள் நிறுவனம், மற்றும் இலங்கை நிலைபெறுதல் வலு அதிகார சபை என்பவற்றின் அனுசரணையுடன் 10 ஆயிரம் மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட பாவனைக்காலம் கொண்ட 85 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க கூடிய, இரசாயன சேர்க்கை கொண்டிராத, சூழலுக்கு உகந்ததான, மின்சார சேமிப்பும், சக்தி வினைத்திறன் கொண்ட எல்.ஈ.டி மின்குமிழ்களை தெரிவு செய்யப்பட்ட மின் நுகர்வோர், மின்சார சபையில் பெற்றுக்கொள்ள முடியும்.

மின்பட்டியலின் மேற்பகுதியில் ‘2 எல்.ஈ.டி பல்ப்ஸ்’  என குறிப்பிடப்பட்டிருப்பின் உங்கள் அடையாள அட்டையுடன் 2019 ஆம் ஆண்டு மே மாதத்திற்குரிய உங்களின் மின்பட்டியலையும் எடுத்துச் சென்று எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையிலும் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதேச மின்சார சபை காரியாலயம், மடு பிரதேச மடு நுகர்வோர் சேவை நிலையம் என்பவற்றில் தங்களுக்குரிய எல்.ஈ.டி மின் குமிழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா பிரதேச மின்சார சபை காரியாலயம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்