மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

நமது உடல் எடை முழுவதையும் தாங்கக்கூடியது எவையென்றால் நமது கால்கள் மட்டுமே. இந்த கால்கள் அந்த பெண்களின் அதீத எடையைத் தாங்குவதால் அவர்களின் முழங்கால் மூட்டுக்களில் அதீத அழுத்தம் ஏற்பட்டுச் எலும்புத் தேய்மானம் தொடங்க வாய்ப்பு உண்டாகிறது.

பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு (Menses) நின்று விடுவதால் (மெனோபாஸ் – Menopause) அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு முற்றிலும் தடைபடுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாக்கி அவர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இதற்கு ஒரே தீர்வு அவர்கள் அவர்களது உடல் எடையை குறைப்பது மட்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்