பயங்கரவாதியுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர் – அசாத் சாலி

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக  முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி சாட்சியம் வழங்கினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டு தேர்தல் காலப்பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே, உதவிகளை வழங்குவோம் என தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹரான், மக்களை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை வைத்திருந்தார்.

இதன் பின்னர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹரானுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தனர்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்