முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஒக்டென் 92 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்