நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பிரச்சினையிலேயே முடிவடையும் – அஜித் பி. பேரேரா

ஓரு தரப்பினரின் அவசரத்திற்கு இணங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் மறுபுறம் அவை பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என அமைச்சர் அஜித் பி. பேரேரா தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குவின் தலைவர்களுக்கும் அரசியல் கட்சி செயாளர்களுக்கும், கட்சியின்  முக்கிய  உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது மாகாண சபைக்கு பொறுப்பான அமைச்சு ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுகின்றது. தேர்தலை விரைவாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் முறையாக இடம் பெறுகின்றது.

ஓரு தரப்பினரின் அவசரத்திற்கு இணங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் அவை மறுபுறம் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

நாட்டு மக்கள் இன்று ஜனாதிபதி தேர்தலையே எதிர்பார்த்துள்ளார்கள். இத் தேர்தலின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

மாகாணசபை தேர்தல்  காலவரையறையின்றி  பிற்போடப்பட்டமைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது” எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்