தெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – பிரதமர்!

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த செயல்பாடுகள் உள்ளது எனவே தான் யாரையும் தலையிட அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் இறையாண்மையை உறுதி செய்வதில் அரசாங்கம் பணியாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, நாட்டிற்குள் தற்போது இஸ்திரமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் .

எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளையும் அதன் அச்சுறுத்தல்களையும் குறைப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்