ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் திகதி நிச்சயிக்கப்பட்டிருப்பதால் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் எந்த நெருக்கடியும்  ஏற்படாது.எனினும் காலவரைறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை  பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின்  செயலாளர்களுக்கும்,கட்சியின்  முக்கிய தரப்பினருக்கும்  தேர்தல் ஆணைக்கழுவின் தலைவருக்கும் இடையில் ஊத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் தொடர்பிலான கலந்துரையாடல்  நேற்று தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாவது,

திகதி மற்றும் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத ஜனாதிபதி தேர்தலுக்கே இன்று அனைத்து தரப்பினரும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்  குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லை.தேர்தல் ஆணைக்குழவின் செயற்பாடுகளுக்கும் ஒரு  வரையறை காணப்படுகின்றது.தேர்தல் திருத்தம் தொடர்பில்  பாராளுதமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய விடயங்களை  எம்மால் செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.