சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம்.

கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-0௨இல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின்   திருச்சடங்கானது அரோஹரா கோசம் முழங்க  தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா  தலைமையில் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நேற்று(11,06.2019) நடைபெற்றது. இதன்போது பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில்  திருச்சடங்கு மற்றும் அம்மன் ஆலய உள் வீதியுலா வருகை என்பனவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடதக்கது .

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்