கைநழுவிச் சென்ற காதல்

என்னைத் தீண்டிய தென்றல் இன்று
எங்கோ வீசுகின்றது தெரியவில்லை.
தேகம் தடவி வந்த வாசம்
காற்றில் கலந்ததோ புரியவில்லை.

இமைக்கும் பொழுதில் வீசிய தென்றல்
புழுதி வாரி வீசியது,
புண்ணான நெஞ்சுக்குள்ளே- நினைவுகள்
புழுவாக நுழைகின்றது.

பிரிந்து சென்ற நாள் முதலாய்
பிரியப்பட்ட மணித்துளிகள்,
தீயிட்டு எரிக்கின்றது,
தீண்டாமை வலிகின்றது.

கால வேகத்தில்
கைநழுவிச் சென்ற காதல்
கண்ணீரைத் துடைத்திடுமா..?
கட்டிக்கதை பேசிடுமா..?

காந்தத்தின் ஈர்ப்பு கொண்டு
கரும்பாகக் கசிந்த நீயும்
விருப்பின்றி இருக்கின்ற
வேதனையைச் சொல்வாயா..?

வேண்டாத பெண்ணென்றா
விட்டு விலகி நீசென்றாய்?
தாங்காத இதயத்தை
தட்டித்தட்டி துடிக்கவைத்தாய்.

வை.கே.ராஜூ
நாவிதன்வெளி-2

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்