‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இடைக்காலத் தடை

நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘கொலையுதிர் காலம்’ படத்தை வௌியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி குமார், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் என்ற நாவலை, சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு வாங்கி உரிமை பெற்றிருந்துள்ளார்.இந்நிலையில், கொலையுதிர் காலம் என்ற இந்தப் படத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியிருந்தன.

இதனையடுத்து, ‘கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் படத்தை வௌியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் படத்தை வௌியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என, இயக்குநர் பாலாஜி குமார் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று (11ஆம் திகதி) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், ‘கொலையுதிர் காலம்’ படத்தை வௌியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு படத் தயாரிப்புக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்