ரஜினியின் தர்பார் படத்தின் டீஸர் எப்போது?- வெளியான தகவல்

ரஜினி 2.0 படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.  இப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் தான் வந்தது அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.

நடந்து வரும் படப்பிடிப்பு இடைவேளை இல்லாமல் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும் என்கின்றனர். படத்தின் டீஸர் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டிசம்பர் 12ம் தேதி வரும் என்று வதந்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

இது உண்மையா இல்லை படக்குழு வேறு பிளான் வைத்துள்ளார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்