சிசிர மெண்டிஸ் ராஜினாமாவில் சந்தேகம் – மனுஷ நாணயக்கார

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ராஜினாமா செய்தமை தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியல் செல்வாக்கு காரணமாக அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவரின் ராஜினாமா செய்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உளவுத்துறையின் குறைபாடுகள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்காதமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தால் அது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த இராஜினாமாவில் ஒருவரது தலையீடு அல்லது அரசியல் அழுத்தம் இருப்பதாக பெரும்பாலானவர்களிடம் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளினால் உளவு துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்