பிரதமர் ரணில் சிங்கப்பூர் நோக்கி பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

பிரதமருடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) பகல் 12.15 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான ருடு 308 என்ற விமானத்தில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினர் 14ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட பயணமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது ஸ்திரமற்ற தன்மையே நிலவி வருகிறது. அத்தோடு நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக பல முரண்பாடுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே பிரதமர் இந்த பணத்தை மேற்கொண்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்