நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அதிகாரம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் – வாசுதேவ

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அதிகாரம் தொடர்பாக தெளிவுபடுத்துமாறு வாசுதேவ நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதத்தை அனுப்பியதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்பதனால் மீண்டும் ஒரு கடிதத்தினை கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “எந்தவொரு நாடாளுமன்ற தேர்வுக்குழுவாக இருந்தாலும் அது நாடாளுமன்றத்தின் அதிகாரம் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் .

இதன் ஊடாகவே மக்களின் பாதுகாப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்துகிறது. எனவே நாடாளுமன்றம் நாட்டிற்கு ஆபத்து இல்லாமல் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

சமீபத்திய சம்பவங்களுக்கு உண்மையான பொறுப்பு யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு எதிராக, எவரும் நிற்க முடியாது. இருப்பினும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முறையான பிரதி நிதித்துவத்தினாலேயே இதனை அடைய முடியும். ஆனால் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் மூலம் நீதியை அடைய முடியாது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்