குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயத்திற்கு ரத்தன தேரர் விஜயம்

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அவர் இன்று (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அதுரலிய தேரருடன் தேரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.

இவர்கள் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட்டதுடன், தேவாலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

அதேநேரம், அதுரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்