கஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணை- கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு

கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் கண்காணிப்புக்காக பிரசன்னப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, பிரபல பாதாள உலக குழு தலைவர் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மன்றில் அறிவித்துள்ளது.

நீதவானின் கண்காணிப்புக்காக சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சன டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்