ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்று என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை மூன்றரை மணிவரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்