புதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டு வைத்தார் மாவை

புதிய தமிழ்நாதம் பத்திரிகை இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று மாலை கிளிநாச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பத்திரிகையின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.ஸ்ரீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, வை.தவநாதன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்