தெரிவுக்குழுப் பணிகளை இடைநிறுத்தவே முடியாது!

– சபாநாயகருடனான சந்திப்பில் தீர்மானம்

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தெரிவுக்குழு நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும், குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமளிக்கும் வரை தெரிவுக்குழு நடவடிக்கையைத் தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குகுழு உறுப்பினர்கள் நேற்றுச் சபாநாயகர் கருஜயசூரியவைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது தெரிவுக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்