பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

நாட்டின் சில பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளுக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசன் பூரணையை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், சுவர்ணபாலி தேசிய பாடசாலை, ஸ்ரீமத் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், புனித ஜோசப் மகா வித்தியாலயம், விவேகானந்தா மகா வித்தியாலயம், சாஹிரா மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், தேவநம்பியதிஸ்ஸ மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

மேலும், கலென்பிந்துனுவௌ கல்வி வலயத்திற்குட்பட்ட மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் கம்மலக்குளம் வித்தியாலயம் ஆகியன மூடப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்