காரணம் சொல்வாயா?

கொஞ்சம் வலி கொஞ்சம் சுகம்
இரண்டும் கொண்டு வாழ்கின்றேன்.
சொல்ல முடியாத ஏக்கங்களை
தாங்கிக்கொண்டு தவிக்கின்றேன்.

இன்பம் துன்பம் கலந்த வேளை
இணைந்து பேசி சிரித்தவனே !
இதயம் இன்று துடிக்கையிலே
எங்கே சென்று மறைந்தாயோ?

பேசிச்சென்ற காதல் வார்த்தைகள்
பேச்சு மொழியானதடா
உன் பெயர்மட்டும் என் நாவை
கொள்ளை கொண்டு ஆழுதடா.

பார்க்கும் திசையெல்லாம்
பாசமான உன் முகம்.
பருதவிக்கும் கண்களுக்கு
ஏதடா மீண்டும் சுகம்.

சிறகு முளைத்து வானில் பறந்த
சின்னக் குயிலே..! -உன்னால்
சிந்தனையில் வாடி மனம்
சின்னாபின்னம் ஆகுதடா.

சந்தண மரத்தோப்புக்குள்ளே
சங்கமித்த நினைவுகளை
சட்டை கழட்டும் பாம்பாக
உதறி விட்டுச் சென்றாயா?

உருக்குலைந்த உடலுக்குள்ளே
உற்புகுந்து நெளிந்தவனே..!
உருவிச் சென்ற காரணத்தை
உருக்கமாக சொல்வாயா?

-வை.கே.ராஜூ-
நாவிதன்வெளி-2

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்