கனேடியத் தூதர் – சத்தியலிங்கம் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத்தூதுவருக்கும் வடமாகாண சபையின் சுகாதார சுதேச வைத்திய முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்டக் கிளைத் தலைவருமான வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைமைகள் குறிப்பாக அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்தும் இனப்பரம்பலை மாற்றும் நோக்கோடு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்திலும் ஐ.நா பிரேரனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தேக்கநிலைமை போன்ற விடயங்களுடன் யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அனைத்துவிடயங்களையும் கேட்டறிந்த கனேடியத்தூதுவர் மேற்படிவிடயங்கள் தொடர்பாக தமது கவனத்தை செலுத்துவதாகத் தெரிவித்தார் என வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்