மீண்டும் இன்று பிற்பகல் கூடுகின்றது தெரிவுக்குழு! – ஹிஸ்புல்லா, இலங்கக்கோன் சாட்சியம் வழங்க அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஆகியோர் இன்று சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவுக்கு சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை தெரிவுக்குழுவில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்ககத்தின் தலைவர் மொஹமமட் சுபைய் ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்